| 245 |
: |
_ _ |a சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவில் - |
| 246 |
: |
_ _ |a திருவெஃகா |
| 520 |
: |
_ _ |a பொய்கையாழ்வார் அவதாரம் செய்த தலமாகும் இது. இங்குள்ள பொய்கையொன்றின் பொற்றாமரையில் அவதாரம் செய்தமையால் பொய்கையாழ்வாரானார். எல்லா ஸ்தலங்களிலும் சயன திருக்கோலமானது இடமிருந்து வலமாக அமைந்திருக்கும், ஆனால் இங்கு மட்டும் பெருமாள் வலமிருந்து இடமாகச் சயனித்துள்ளார். இதற்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன. பக்தர்களும், ஆச்சார்யர்களும் மண்டிக்கிடந்த ஸ்தலமாகும் இது. பொய்கையாழ்வார் இங்கு தான் அவதாரம் செய்தார். திருமழிசையாழ்வார் நெடுங்காலம் இங்கு தங்கி இருந்தார். கணிகண்ணன் இப்பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து உய்ந்தவர். திருமங்கை உட்பட ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்து பாமாலையிட்டுள்ளனர். மணவாள மாமுனிகள் இங்கு ஒரு வருட காலம் தங்கியிருந்து பகவத் விஷயமாக இங்கு உபன்யாசம் நிகழ்த்தியுள்ளார். பிள்ளை லோகாச்சார்யர் இங்கு பெரும்போது போக்கியுள்ளார். இவருக்கு இங்கு தனிச் சன்னதி உள்ளது. பேயாழ்வார் 4 பாசுரங்களாலும் நம்மாழ்வாரும், பொய்கையாழ்வாரும் தலா ஒவ்வொரு பாசுரத்தாலும், திருமழிசை 3 பாசுரங்களாலும் திருமங்கையாழ்வார் 6 பாசுரங்களாலும் இப்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார்கள். சங்க காலத்திலும் இத்தலம் மிகப்புகழ்பெற்று இருந்தது. சங்க இலக்கியங்களில் இத்தலம் குறிக்கப்படுகிறது. நம்மாழ்வார் தமது முதல் பிரபந்தமான திருவிருத்தத்தில் கோயில், திருமலை, திருவெஃகா, ஆகிய 3 திவ்ய தேசங்களை மட்டும் பாடியிருப்பதால் பெருமாள் கோயில் என்பது இத்தலத்தையேக் குறிக்கும் என்று ஆய்வாளர்கள் சிலர் கருத்துக்கொண்டுள்ளனர். தொன்மை மிக்க இத்தலத்தையும் இங்கு எழுந்தருளிய பெருமாளையும் கிடந்தான் என்ற சொல்லாலே ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். அதாவது கிடந்தான் என்னும் சொல் இப்பெருமாளைக் குறிப்பதாகவே பூச்வாச்சார்யர்கள் பொருள் கொண்டுள்ளனர். தலத்தின் பெயரைக் (திருவெஃகாவை) குறிப்பிடாமல் கிடந்தான் என்ற சொல்லுக்கே இப்பெருமாளையும் இத்தலத்தையும் மங்களாசாசனம் செய்துள்ளதாகக் கொண்டுள்ளனர். |
| 653 |
: |
_ _ |a கோயில், வைணவம், பெருமாள், சொன்னவண்ணம் செய்த பெருமாள், திருவெகா, காஞ்சிபுரம், கணிகண்ணன், பொய்கையாழ்வார், திருமழிசையாழ்வார், மங்களாசாசனம் |
| 700 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் |
| 909 |
: |
_ _ |a 2 |
| 910 |
: |
_ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் |
| 914 |
: |
_ _ |a 12.8240753 |
| 915 |
: |
_ _ |a 79.7124678 |
| 916 |
: |
_ _ |a யாதோத்தகாரி |
| 918 |
: |
_ _ |a கோமளவல்லி நாச்சியார் |
| 923 |
: |
_ _ |a பொய்கை புஷ்கரிணி |
| 925 |
: |
_ _ |a காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a சொன்ன வண்ணம் செய்த பெருமாள் மேற்கு நோக்கிய திருக்கோலம். |
| 930 |
: |
_ _ |a பிரம்மாண்ட புராணத்தில் இத்தலம் பற்றி பேசப்படுகிறது. பலவிதமான தடைகளையும் மஹாவிஷ்ணுவின் பேரருளால் உடைத்தெறிந்த பிரம்மன் யாகத்தை தொடர்ந்து நடத்தினார். எத்தனை முறை தொடர்ந்தாலும் அத்தனை தடவையும் துன்பம் தந்து யாகத்தை தடுக்க நினைத்த சரஸ்வதி இம்முறை பொங்கிவரும் பெரும் நதியாக மாறி வெள்ளமெனப் பெருக்கெடுத்து வந்தாள். வேகமாக வந்ததால் வேகவதி எனப் பெயருண்டாயிற்று. பிரம்மா செய்த பரிவேள்வியை அழிக்க வந்த வேகவதி நதியைத் தடுக்க அதற்குக் குறுக்கே எம்பெருமான் அணையாகப் படுத்துக்கொண்டான். எம்பெருமான் படுத்திருந்த திருக்கோலத்தைக் கண்ட சரஸ்வதி முன்னேறிச் செல்ல வொண்ணாமல் பின் வாங்கினாள். இதனால் வேகாஷேது என்று பெயர் பெற்றாள். தமிழில் வேகவனை என்றானது. இச்சொல் நாளடைவில் வேகனை என்று திரிந்து பிறகு வேகினி என்றாகி வெஃகின என்றாகி வெஃகணையானது. காலப்போக்கில் வெஃகா என்றாயிற்று. தாம் யாகம் செய்யும் பகுதியை நோக்கி ஒரு பெரும் நதி வருவதையறிந்த பிரம்மன் வழக்கம் போல் தன்னையும் தம் யாகத்தையும் காக்க திருமாலைத் துதித்தான். திருமால் அவ்வெள்ளத்திற்கு எதிரே அணையாகப் படுத்தார். திருமாலின் அறிதுயில் கோலத்தைக் கண்ணுற்ற சரஸ்வதி தனது வேகத்தை சுருக்கி தன்னை மறைத்துக் கொண்டாள். சரஸ்வதி மறையலுற்றதும் திருமால் தனது தேவியுடன் பிரம்மாவுக்கு காட்சி கொடுக்க பிரம்மன் யாகத்தைத் தொடர்ந்தார். திருமழிசையாழ்வார் இத்திவ்யதேசத்தில் சில காலம் தங்கி இருந்தார். அவருக்கு கணிகண்ணன் என்னும் சீடன் ஒருவன் இருந்தான். பேராற்றலும் பெரும் பக்தியும் கொண்ட கணிகண்ணன் எம்பெருமான் மீது நித்தமும் கவிதை மழை பொழிந்து கொண்டிருந்தான். இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட மன்னன் தன்னைக் குறித்து ஒரு பாடல் புனையுமாறு கணிகண்னைக் கேட்க திருமாலைத் தவிர்த்து பிற தெய்வத்தைப் பாடாத நான் மானிடரைப் பாடமுடியுமா. இச் செந்நாவின் இன் கவி பெருமாளுக்கு மட்டுமே, நான் மானிடரைப் பாடமாட்டேன் என்றார். இதைக் கேட்டு சினந்த மன்னன் கணிகண்ணனை நாடுகடத்த உத்திரவிட்டான். கணிகண்ணனுக்கு நேர்ந்ததைச் செவிமடுத்த திருமழிசையாழ்வார் தாமும் கடக்கத் தயாரானார். இருவரும் நாடு கடந்து செல்ல எத்தனிக்கையில்பெருமாளை மட்டும் விடுத்துப் போவரோ, நீங்க வொன்னா இன்பம் பூண்ட பெருமாளிடம் வந்தார் திருமிழிசை. பெருமானின் எதிரில் நின்று கச்சி மணிவண்ணா, கனி கண்ணன் போகின்றான். எனவே நானும் உடன் செல்லத் துணிந்தேன். நீயும் இங்கு கிடக்க வேண்டாம். விஷமுடைய பாம்பினை படுக்கையாகக் கொண்டு படுத்திருப்பவனே நீயும் உந்தன். (பாம்பும்) பாயைச் சுருட்டிக்கொள் என்றார். எம்பெருமானும் சரேலென தமது பாயைச் சுருட்டிக் கொண்டு தொண்டர்களைப் பின் தொடர்ந்தார். இம்மூவரும் ஊரின் எல்லையைக் கடந்ததும் மன்னனின் அரசவையில் துர்நிமித்தங்கள் தோன்ற ஆரம்பித்தன. அரண்மனையில் அதிர்வுகள் தோன்ற ஆரம்பித்தன. நகரமே இருண்டு போனது. உடனே மன்னன் மந்திரி பிரதானிகளை அழைத்து வினவ நிலைமை இதுவென்று தெரிந்தது. உடனே தவறுணர்ந்த மன்னன் அவர்கள் சென்ற திக்கினைக் கேட்டுப்பின் தொடர்ந்து ஓடலுற்றான். ஓரிடத்தில் மூவரையுங்கண்டு தெண்டணிட்டு விழுந்து மன்னிப்புக் கேட்டு மீண்டும் காஞ்சிக்கே எழுந்தருள வேண்டுமென்று மன்றாடினான். இந்நிகழ்ச்சி எல்லாம் நடைபெற்றுமுடிய ஓர் இரவும் ஒரு பகலும் ஆயிற்று. சித்தம் மாறிய கணிகண்ணன் திருமழிசையைப் பணிந்து நின்றான். பக்தனின் பொருட்டு பெருமாள் எதையுமே செய்வார். என்றறிந்த திருமிழிசை மீண்டும் தம்முடன் வந்த பகவானை நோக்கி கணிகண்ணன் போவதை விட்டுவிட்டான். நானும் அவ்வாறே ஆனேன். நீயும் போக்கொழிந்து உன் பாய் விரித்துக்கொள்ள வேண்டுமென்றார். எம்பெருமான் மீண்டும் காஞ்சிக்கு வேகமாக திரும்பி சயனித்துக்கொண்டான். அவசர நிமித்தத்தில் வலமிருந்து இடமாகச் சயனித்துவிட்டார் என்று காரணங் கூறுவர். திருமழிசையாழ்வாருடன் பெருமாள் புறப்பட்ட இந்நிகழ்ச்சி இங்கு ஆண்டு தோறும் தை மாதம் மகம் நட்சத்திரத்தினன்று உற்சவமாக நடைபெறுகிறது. அப்போது எம்பெருமானும் ஆழ்வாரும் வேகவதி யாற்றங்கரை வரை சென்று மீள்வர். |
| 932 |
: |
_ _ |a இக்கோயில் விமானம் வேதஸார விமானம் என்னும் வகையைச் சார்ந்தது. |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a காஞ்சி காமாட்சியம்மன் கோயில், வரதராஜப்பெருமாள் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில் |
| 935 |
: |
_ _ |a காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள சின்னக் காஞ்சிபுரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. |
| 936 |
: |
_ _ |a காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 வரை |
| 937 |
: |
_ _ |a காஞ்சிபுரம் |
| 938 |
: |
_ _ |a காஞ்சிபுரம் |
| 939 |
: |
_ _ |a சென்னை - மீனம்பாக்கம் |
| 940 |
: |
_ _ |a காஞ்சிபுரம் விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000176 |
| barcode |
: |
TVA_TEM_000176 |
| book category |
: |
வைணவம் |
| cover images TVA_TEM_000176/TVA_TEM_000176_திருவெஃகா_சொன்னவண்ணம்-செய்த_பெருமாள்-கோயில்-0001.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000176/TVA_TEM_000176_திருவெஃகா_சொன்னவண்ணம்-செய்த_பெருமாள்-கோயில்-0001.jpg
TVA_TEM_000176/TVA_TEM_000176_திருவெஃகா_சொன்னவண்ணம்-செய்த_பெருமாள்-கோயில்-0002.jpg
TVA_TEM_000176/TVA_TEM_000176_திருவெஃகா_சொன்னவண்ணம்-செய்த_பெருமாள்-கோயில்-0003.jpg
cg103v087.mp4
|